ரஷ்யாவிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள ஆப்பிள் நிறுவனம்

Keerthi
2 years ago
ரஷ்யாவிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள ஆப்பிள் நிறுவனம்

உக்ரேன் மீது போர் தொடுத்ததன் விளைவாக உலகின் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு 20 சதவீதம் சரிவை சந்தித்து உள்ளது. 

இந்நிலையில்,ரஷ்யாவில் இயங்கி வரும் உலகின் முன்னணி நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவருகின்றன. அந்த வகையில் தற்போது ஆப்பிள் நிறுவனமும் ரஷ்யாவிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.
 
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளின் விற்பனை ரஷ்யாவில் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்திருப்பது உலக அளவில் பேசு பொருளாகி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மொபைல், டிவி உள்ளிட்ட பொருட்களின் விற்பனையை ரஷ்யாவில் தடை செய்துள்ளது அந்த நிறுவனம்.

இந்நிலையில், இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," ரஷ்யாவின் நடவடிக்கை குறித்து நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம். ரஷ்யாவின் வன்முறையால் பாதிக்கப்பட்ட உக்ரேன் மக்களுக்கு துணையாக நிற்போம்" எனக் குறிப்பிட்டுள்ளது. பொதுவாக உலக நாடுகளின் விவகாரங்களில் மூக்கை நுழைக்காத ஆப்பிள் நிறுவனம் இந்த முறை ரஷ்யாவிற்கு எதிராக திரும்பியுள்ளது உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.