உக்ரைன் அரசு மீது எழுந்துள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிப்ரவரி 24 அன்று போரை அறிவித்ததில் இருந்து உக்ரைன் ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
உலக நாடுகள் பலவும் ரஷ்யாவை கண்டித்து வருவதுடன், உக்ரைனை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளன.. எனினும் உக்ரைனுக்கு ஆதரவாக யாரும் நேரடிப் போரில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்துள்ளன.. எனினும் உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்கள், நிதி உதவி என உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன..
இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்-ல் வசிக்கும் நபர் ஒருவர், உக்ரைன் அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.. உக்ரைன் மக்களுக்கு ரஷ்ய இராணுவம் மட்டும் அச்சுறுத்தல் அல்ல என்று அவர் கூறியுள்ளார்.. கோன்சலோ லிரா என்ற எழுத்தாளர், இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் பேசியுள்ள அவர் " ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் போரிடத் தயாராக இருக்கும் அனைத்துப் பொதுமக்களுக்கும் ஆயுதம் அளிப்பதாக அதிபர் ஜெலென்ஸ்கியின் ஆட்சி அறிவித்ததைத் தொடர்ந்து, உக்ரைனில் உள்ள குற்றவாளிகள் இராணுவ தர ஆயுதங்களைப் பெற்றுள்ளனர்.
இதனால் கொள்ளை, கற்பழிப்பு மற்றும் அனைத்து வகையான குற்றங்களும் நடந்துள்ளன. நேற்று இரவு கியேவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும் ரஷ்யர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உண்மையாகவே அறியப்படுகிறது; இந்த துப்பாக்கிச்சூட்டின் போது, ரஷ்யர்கள் 10 கி.மீ. தொலைவில் இருந்தனர்.. இவை அநேகமாக உக்ரைனில் உள்ள வன்முறைக் கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்களாக இருக்கலாம்.
கோன்சலோ லிராவின் கூற்றுப்படி, அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அராஜகத்திற்கு மத்தியில், குற்றவாளிகள் தங்கள் புதிய ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் பொதுமக்களைக் குறிவைக்கத் தொடங்குகின்றனர்.." என்று தெரிவித்தார்..
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் அவரது அரசாங்கத்தை குற்றம் சாட்டிய அவர், "ரஷ்யர்களுக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள் என்ற பெயரில் உக்ரைனில் குழப்பத்தை உருவாக்குகிறார்கள். இது அபத்தமானது மட்டுமின்றி பொறுப்பற்றதும் கூட.. இது உக்ரேனிய மக்களை காயப்படுத்தும். ஜெலென்ஸ்கி தலைமையிலான ஆட்சி கொடுங்கோல் ஆட்சி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.." என்று தெரிவித்தார்.