ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளருடன் இலங்கை அரச பிரதிநிதிகள் சந்திப்பு!
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிச்சல் பெச்சலட்டை சந்தித்துள்ளார்.
ஜெனிவாவில் உள்ள பலாசி டெஸ் நேஷன்ஸ் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், பரந்த அளவிலான கலந்துரையாடல்களில் அவர்கள் ஈடுபட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில்,
நீதியமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
அதேநேரம், மனித உரிமைகள் பேரவையின் பக்க அம்சமாக, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் பல சந்திப்புக்களில் பங்கேற்றுள்ளார்.
பாகிஸ்தான், பலஸ்தீனம், தென்னாபிரிக்கா, சவூதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை, வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது