எரிபொருள் நெருக்கடி: ஒன்றரை லட்சம் அரசாங்க ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை

Mayoorikka
2 years ago
எரிபொருள் நெருக்கடி:  ஒன்றரை லட்சம் அரசாங்க ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை

எரிபொருள் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து பிரச்சினையால் சுமார்10 வீதமான அரச ஊழியர்கள்நேற்று முன்தினம் கடமைக்கு சமூகமளிக் ஒன்றரை லட்சம் பேர் பணிக்குகவில்லை என அரசசேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முழுமையான அரச ஊழியர்களில் 15 லட்சம் பேரில் வரவில்லை என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் ரயில் சேவைகள் வழமை போன்று இயங்குகின்றன. ஆனால் 18,000 தனியார் பஸ்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நேற்று முன்தினம் இயக்கப்பட்டது.

அலுவலகப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படும் பஸ்களும் எரிபொருள் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதால், அரச உத்தியோகத்தர்கள் கடமைக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் பணிக்கு அரச ஊழியர்களை
மீள அழைப்பது தொடர்பில் கடந்த 21ஆம் திகதி தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் கலந்துரையாடப்பட்டபோதிலும் இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என தெரிவிக்கப் படுகின்றது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!