எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பதற்கான அபாயம்!
Mayoorikka
2 years ago
எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமென தகவல்கள் கசிந்துள்ளன.
எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் மத்திய வங்கி கோரியுள்ளது. இதுதொடர்பில் மத்திய வங்கி இறுதித் தீர்மானம் எதனையும் இதுவரையிலும் எடுக்கவில்லை என்று அறியமுடிகின்றது.
எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டணங்களை உடன் அதிகரிப்பது குறித்து கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் மத்திய வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது.