ரஷ்ய- உக்ரைன் போர்; நிக்கல்உலோகங்கள் 11 ஆண்டுகளில் இல்லாத விலை அதிகரிப்பு

Mayoorikka
2 years ago
ரஷ்ய- உக்ரைன் போர்;  நிக்கல்உலோகங்கள் 11 ஆண்டுகளில் இல்லாத  விலை அதிகரிப்பு

ரஷ்யாவிஉக்ரைன்ல் இருந்து விநியோகத்தில் இடையூறு ஏற்படும் அச்சம் காரணமாக அலுமினியம் விலை  அதிகரித்திருப்பதோடு நிக்கல் விலை 11 ஆண்டுகளில் இல்லாத அதிகரிப்பை நெருங்கியுள்ளது.

இந்த இரண்டு உலோகங்களினதும் பிரதான உற்பத்தியாளராக ரஷ்யா இருப்பதோடு, இவைகளின் சர்வதேச கையிருப்பும் வேகமாக குறைந்து வருகிறது.

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பால் சரக்குகள் சந்தைகளில் ஸ்தம்பித்துள்ளன. 

புதிய தடைகள் பற்றிய அச்சுறுத்தல் காரணமாக பெரு நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறுவதோடு, கடன் வழங்குநர்கள் நிதி ஒப்பந்தங்களில் இருந்து பின்வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட பாதி அளவான உலக கொள்கலன் கப்பல்கள் ரஷ்யாவுக்கு செல்லவோ அங்கிருந்து புறப்படவோ இல்லை என்று கப்பல் நிறுவனங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இதனால் அலுமினியம் விலை 2.4 வீதமும் நிக்கல் விலை 2.3 வீதமும் உயர்ந்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!