இலங்கையில் சமையல் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் நிலை!
Mayoorikka
2 years ago
இலங்கையில் சமையல் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
எல்சி ஆவணங்களை திறப்பதற்கு தங்களிற்கு உள்ளுர் வங்கிகள் அனுமதிவழங்க மறுக்கின்றன என சமையல் எரிவாயு இறக்குதியில் ஈடுபட்டுள்ள இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
இதன்காரணமாக சமையல் எரிவாயுவிற்கு பெருந்தட்டுப்பாடு ஏற்படலாம் என இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தன்னிடம் கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு நேற்றுடன் முடிவடைந்துள்ளது என லாவ்ஸ் ஹோல்டிங் நிறுவனத்தின் டபில்யூ கே எச் நிறுவனத்தின் தலைவர் வெகாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது எரிபொருளிற்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் இது மற்றுமொரு பாரிய விவகாரமாக மாறப்போகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.