விமல், கம்மன்பில காட்போட் வீரர்கள்; மைத்திரியுடன் சேர்வது வெட்கக்கேடு- இப்படிப் போட்டுத் தாக்குகின்றது 'மொட்டு'

#SriLanka
விமல், கம்மன்பில காட்போட் வீரர்கள்; மைத்திரியுடன் சேர்வது வெட்கக்கேடு- இப்படிப் போட்டுத் தாக்குகின்றது 'மொட்டு'

அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிராக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி உறுப்பினர்கள் சொற்போர் தொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இவ்விருவரையும் கடுமையாக விமர்சித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

விமலும், கம்மன்பிலவும் ‘காட்போட் வீரர்கள், ‘மைக் டைசன்கள்’ எனச் சாடியுள்ளார் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன.

அரசில் இருந்துகொண்டு சகலவித சிறப்புரிமைகளையும் அனுபவித்தபடி விமர்சிப்பதைவிட, அவர்கள் வெளியேறியே விமர்சனங்களை முன்வைத்திருக்க வேண்டும் எனவும், நாட்டைச் சீரழித்த மைத்திரியுடன் கூட்டுச்  சேர்வது வெட்கக்கேடாகும் எனவும் அவர் சாடியுள்ளார்.

அத்துடன், விமல் வீரவன்ச ஜனாதிபதி கனவில் இருக்கின்றார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி விமர்சித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!