வெளியேறுங்கள்;  இல்லையேல் நான் வெளியேற்றுவேன் அமைச்சரவையில் இருந்துகொண்டு அரசை விமர்சிப்பவர்களுக்குக் கோட்டா எச்சரிக்கை

#SriLanka #Sri Lanka President #Gotabaya Rajapaksa
வெளியேறுங்கள்;  இல்லையேல் நான் வெளியேற்றுவேன்  அமைச்சரவையில் இருந்துகொண்டு அரசை விமர்சிப்பவர்களுக்குக் கோட்டா எச்சரிக்கை

"அரசை விமர்சிப்பவர்களுக்கு அமைச்சுப் பதவி எதற்கு? அமைச்சரவையிலிருந்து இருந்துகொண்டு அரசை விமர்சிப்பவர்கள் ஒன்றில் தாமாக வெளியேற வேண்டும். இல்லையேல் எனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை நானே வெளியேற்றுவேன்."

- இவ்வாறு கடும் தொனியில் எச்சரிக்கையுடன் வலியுறுத்தியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

அரசின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் நேற்று நடத்திய அவசர கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நான் 69 இலட்சம் மக்களின் ஆணையுடன்தான் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்தேன். எனக்கு ஆணை வழங்கிய மக்களை ஏமாற்றவும் மாட்டேன்; அவர்களுக்குத் துரோகம் செய்யவும் மாட்டேன்.

நாடு இன்று பொருளாதார ரீதியில் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில், அமைச்சரவையில் இருக்கும் சிலர், பொறுப்பிழந்து, பதவி என்ற ஒன்றை மறந்து கீழ்த்தரமாகச் செயற்படுகின்றனர். அரசைக் கண்டபடி விமர்சிக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் அமைச்சுப் பதவி எதற்கு?

அரசை வீழ்த்துவதுதான் இவர்களின் நோக்கமாக இருந்தால் அது ஒருபோதும் சாத்தியமாகாது. எமது அரசை எவராலும் அசைக்கவே முடியாது" - என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!