அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வோர்ன் திடீர் மரணம்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Nila
2 years ago
அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வோர்ன் திடீர் மரணம்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்

உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் காலமானார்.

52 வயதான அவர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

தாய்லாந்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோது, ​​​அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ​​​​அவருடன் தங்கியிருந்த ஊழியர்கள் ஷேன் வார்னின் உயிரைக் காப்பாற்ற தீவிரமாக முயன்றுள்ளனர்.

எனினும் அது தோல்வியடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

15 ஆண்டுகளாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய ஷேன் வார்ன், 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

உலக கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் விக்கெட் பட்டியலில்  தொடர்ந்தும் அவர் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஷேன் வோர்ன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அவுஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்திய 194 ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அத்துடன், இருபதுக்கு 20 போட்டிகளில் 70 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ஷேன் வோர்ன்  1969 செப்டம்பர் 13 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள ஃபிராண்டிங்கேலில் பிறந்தார்.

இதேவேளை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் ரோட்னி மார்ஷின் மறைவுக்கு ஷேன் வோர்ன் இன்று காலை ட்விட்டர்  இரங்கல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!