INDvsSL Test - முதல் நாள் ஆட்ட நிறைவில் ரிஷாப் பேண்ட்டின் அதிரடியால் வலுவான நிலையில் இந்தியா
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே மொஹாலியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 357 ஓட்டங்களை எடுத்துள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இது இலங்கை அணிக்கு 300-வது டெஸ்ட் மற்றும் இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும்.
தொடக்க ஆட்டக்காரர்களான ஷர்மா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் ஆரம்ப விக்கெட்டுக்கு 52 ஓட்டங்களை சேர்த்தனர், பின்னர் லஹிரு குமார் வீசிய முதல் ஓவரில் ஷர்மா 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அகர்வால் 33 ஓட்டங்களை எடுத்தார்.
கோஹ்லி மற்றும் ஹனுமன் விஹாரி மூன்றாவது விக்கெட்டுக்கு 90 ஓட்டங்களைச் சேர்த்தனர்.
கோஹ்லி 45 ஓட்டங்கள் எடுத்தார். விஹாரி 58 ஓட்டங்களை எடுத்தார்.
இன்றைய தினம் கோஹ்லி தனது 8,000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்தார். அதன்படி, 8,000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த ஆறாவது இந்திய துடுப்பாட்ட வீரர் என் பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார்.
20/20 தொடரில் இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு கடுமையான சவாலாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயரை தனஞ்சய டி சில்வா 27 ஓட்டங்களுக்கு வீழ்த்தினார்.
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ரிஷப் பந்த் 96 ஓட்டங்கள் எடுத்து இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருந்தார்.
பந்து வீச்சில் லசித் அம்புல்தெனிய 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.