ரஷியாவில் தயாரிப்புகள்,விற்பனை மற்றும் சேவைகளை நிறுத்திய மைக்ரோசாப்ட் நிறுவனம்..!

Keerthi
2 years ago
ரஷியாவில் தயாரிப்புகள்,விற்பனை மற்றும் சேவைகளை நிறுத்திய மைக்ரோசாப்ட் நிறுவனம்..!

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ரஷியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்ற அனைத்தையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

உக்ரைனில் இருந்து வரும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைக் கண்டு வருத்தமடைகிறோம். மேலும் ரஷியாவின் இந்த நியாமற்ற சட்ட விரோதமான ஆக்கிரமிப்பை கண்டிக்கிறோம். ரஷியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்ற அனைத்து விதமான புதிய விற்பனைகளையும் நிறுத்தி வைக்கிறோம்.

உக்ரைன் மீதான ரஷியாவின் இணையத் தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்கும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து செயலாற்றி வருகிறோம். உக்ரைனில் உள்ள மக்களுக்கு உதவ நாங்கள் தொடர்ந்து வளங்களை திரட்டி வருகிறோம் என்று கூறியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!