கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு பின்னர் பிறப்பு விகிதத்தில் சரிவை கண்ட ஹொங்கொங்

Prasu
2 years ago
கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு பின்னர் பிறப்பு விகிதத்தில் சரிவை கண்ட ஹொங்கொங்

கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு பின்னர் ஹொங்கொங்கின் பிறப்பு விகிதம் முதல் முறையாக 40,000 க்கும் கீழே சரிந்ததுள்ளது எனவும் கடந்த வருடமும் மிகக் குறைந்த அளவிலேயே குழந்தைகள் பிறந்துள்ளமையும் நகரத்தின் வயதான மக்களுக்கு பரவலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தப் போக்கானது, கல்வியின் ஒவ்வொரு நிலையிலும் மாணவர் சேர்க்கையை சுருங்கச் செய்யும் என்றும், இறுதியில் மனிதவள விநியோகத்தை எதிர்காலத்தில் பாதிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய கல்வியாண்டின் இறுதிக்குள் ஏழு பாலர் பாடசாலைகள் மூடப்படவுள்ளதால், ஆரம்பக் கல்விப் பிரிவானது ஏற்படவுள்ள விளைவுகளை உணர்ந்துள்ளது.

பாலர் பாடசாலைகள் மற்றைய பாடசாலையுடன் இணைக்கப்படும் என்று கல்விப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 38,684 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ள நிலையில், 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 8 சதவீதம் சரிந்ததுள்ளது.

தொடர்ந்து ஏழாவது வருடமாக இடம்பெறும் சரிவை இது குறிக்கின்றமை மட்டுமல்லாமல், 1966 இலிருந்து கிடைக்கும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் அடிப்படையில் மிகக் குறைந்த எண்ணிக்கையாகவும் காணப்படுகிறது.

கொரோனா தொற்று முடியும் வரை பிறப்பு விகிதம் மேம்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் 2003 இல் சார்ஸ் தொற்றுநோய் நகரைத் தாக்கியதை விட தற்போதைய நிலைமை மோசமாக இருப்பதாகவும்எ ன்று ஆரம்பக் குழந்தைப் பருவ கல்வியாளர்கள் சங்கத்தின் தலைவர் சவ் வை-சுன் சுட்டிக்காட்டினார். 

2020 ஆம் ஆண்டில் ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பீஜிங் சுமத்தியமை மற்றும் நகரின் அரசியல் விவகாரங்களில் அதன் இறுக்கமான பிடியால் தூண்டப்பட்ட குடியேற்ற அலைகள் நிலைமையை அதிகப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகறது.

கோடைகால விடுமுறைக்குப் பின்னரான  முதல் நான்கு மாதங்களில் நாட்டின் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பாடசாலைகளிலிருந்து சுமார் 6,200 மாணவர்களை விலகியதாக உத்தியோகபூர்வ தரவுகளை மேற்கோள் காட்டி, போஸ்ட் பத்திரிகை கடந்த டிசெம்பரில் தெரிவித்திருந்தது.

பெரும்பாலானவர்கள் தங்கள் குடும்பங்களுடன் இடம்பெயர்ந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!