வெளிநாட்டு விமானச் சேவைகளை நிறுத்திவைக்கும் ரஷ்யாவின் ஏரோஃபுளோட் விமான நிறுவனம்
Keerthi
2 years ago
பெலருஸ் நாட்டைத் தவிர்த்து, மார்ச் 8ஆம் தேதியிலிருந்து வெளிநாட்டு விமானச் சேவைகள் அனைத்தையும் நிறுத்துவதாக ரஷ்யாவின் ஏரோஃபுளோட் விமான நிறுவனம் கூறியதை மேற்கோள்காட்டி டிஏஎஸ்எஸ் செய்தி நிறுவனம் சனிக்கிழமை (மார்ச் 5) கூறியது.
வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட விமானங்களை வைத்திருக்கும் ரஷ்ய விமான நிறுவனங்கள், பயணிகள் மற்றும் சரக்கு விமானச் சேவைகளை நிறுத்திவைக்குமாறு ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து ஆணையம் கேட்டுக்கொண்டது.