இன்றைய தினமும் இரண்டரை மணிநேர மின்வெட்டு - பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு
Reha
2 years ago
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் இரண்டரை மணிநேரத்திற்கு மின்சாரத்தை துண்டிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதியளித்துள்ளது.
இதற்கமைய ஏ.பி மற்றும் சி. வலயங்களில் மாத்திரம் இன்று மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. ஞாயிற்று கிழமை என்பதால் இன்றைய தினம் பகல் வேளையில் 1,650 மொகாவொட் மின்சார தேவை இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
அத்துடன் மாலை வேளையில் 1,550 மொகாவொட் மின்சாரத்திற்கான தேவையும் இரவு வேளையில் 2, 350 மொகாவொட் மின்சாரத்திற்கான தேவையும் நிலவும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் மிகவும் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மக்களிடம் கோரியுள்ளது.