நாட்டில் மேலும் 639 பேருக்கு கொவிட்
Prabha Praneetha
2 years ago
நாட்டில் மேலும் 639 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 649,632 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 14 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 16,321 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.