ஐ.நா மனித உரிமைப் பேரவை பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யத் தடை

Prabha Praneetha
2 years ago
ஐ.நா மனித உரிமைப் பேரவை பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யத் தடை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன, இராணுவத் தளபதி சவேந்திரா சில்வா உள்ளிட்ட 28 பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு எதிரான போர்க் குற்றச் செயல் சாட்சியங்களை திரட்டும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பிரதிநிதிகள் இலங்கை விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பேசெலட்டினால் இந்த பிரதிநிதிகள் குழு அனுப்பி வைக்கப்படவிருந்தது.

விசாரணையாளர், மொழிபெயர்ப்பாளர், வழக்குப் பணிப்பாளர் உள்ளிட்ட ஐந்து பிரதிநிதிகள் இவ்வாறு இலங்கை விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

இந்தப் பிரதிநிதிகள் காணாமல் போனவர்களின் குடும்பங்களை சந்திக்கவும், வடக்கு தமிழ் அரசியல்வாதிகளை சந்திக்கவும் திட்டமிட்டிருந்தனர்.

எனினும், குறித்த பிரதிநிதிகளின் இலங்கை விஜயத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என  செய்திகள் வெளியாகியுள்ளது .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!