அளவுக்கதிகமான போதை மாத்திரையால் உயிரிழந்த யாழ் இளைஞன்
#SriLanka
#Jaffna
#Death
Nila
2 years ago
யாழ்.வலிகாமம் வடக்கு கட்டுவன் பகுதியில் அளவுக்கு அதிகமான போதை மாத்திரைகளை உட்கொண்ட 19 வயதான இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
நேற்று முன் தினமாலை போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட நிலையில் நேற்றிரவு உயிரிழந்தார். சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரிடமிருந்து பிறி கப் போதை மாத்திரைகளை இருவர் வாங்கியுள்ளனர்.
தண்ணீரில் நனைந்த போதை மாத்திரைகள் பல ஒன்றோடு ஒன்று ஒட்டியவாறு காணப்பட்டுள்ளது. அவற்றை ஒரேயடியாக உட்கொண்ட நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.