10 இலட்சம் மதிப்புள்ள ஏலக்காய் மூடைகள் பொலிஸாரால் பறிமுதல்

Prabha Praneetha
2 years ago
10 இலட்சம் மதிப்புள்ள ஏலக்காய் மூடைகள் பொலிஸாரால் பறிமுதல்

இந்தியாவின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10லட்சம் மதிப்புள்ள ஏலக்காய் மூடைகளை நேற்று ​பொலிசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியில் இருந்து இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க கியூ பிரான்ச் பொலிசார் மாவட்டம் முழுவதும் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்ராஜ், ஜீவமணி, சுரேஷ், இருதயராஜ், மரைன் பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி மற்றும் பொலிசார் தாளமுத்துநகர் விவேகானந்தன் காலனி கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடற்கரை அருகே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தபட்பட்டிருந்த 2 படகுகளில் சோதனையிட்டபோது மொத்தம் 14 மூடைகளில் 550 கிலோ ஏலக்காய் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு ரூ.10லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த ஏலக்காய் மூடைளை மர்ம நபர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. அவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் 2 படகுகள், ஏலக்காய் மூடைகளை பொலிசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!