உக்ரைனின் பேச்சுவார்த்தை குழுவில் ரஷ்ய உளவாளி! - அடுத்து நடந்த பரபரப்பு
உக்ரைன் - ரஷ்யாவுக்கும் இடையே போர் தொடர்ந்து நடைபெறும் நிலையில், இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வந்ததுடன், தற்போது மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கும் தயாராகின்றது.
இந்த நிலையில், அமைதி பேச்சுவார்த்தையில் இடம் பெற்றிருந்த குழு பற்றி முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, உக்ரைன் பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவர் ரஷ்ய உளவாளி என்பதை உக்ரைன் பாதுகாப்பு அமைப்பு (Service of Ukraine) கண்டுபிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து வரை உக்ரைன் பாதுகாப்பு அமைப்பு சுட்டுக் கொன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவலை உக்ரைன் நாட்டில் பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ள போதிலும், இதுவரை உக்ரைன் அரசு சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
யார் அவர்?
உக்ரைன் பாதுகாப்புப் படை சுட்டுக் கொல்லப்பட்டுள்ள டெனிஸ் கிரியே என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் ரஷ்யா உளவாளி என்பதை நிரூபிக்கும் வகையில் தொலைப்பேசி உரையாடல் உட்பட அனைத்து ஆதாரங்களும் தங்களிடம் உள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெனிஸ் கிரியே கைது செய்யும் சமயத்தில், அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
டெனிஸ் கிரியே 2006 முதல் 2008 வரை, எஸ்சிஎம் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அங்கு அவர் துணை பொது இயக்குநராக இருந்தார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரிய நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த அவர் பின்னர் உக்ரெக்ஸிம் வங்கியின் மேற்பார்வைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார்.
பின்னர் 2010 முதல் 2014 வரை, உக்ரைன் அரசு வங்கி வாரியத்தின் முதல் துணைத் தலைவராகவும் தனியார் ஈக்விட்டி ஃபண்ட் நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த டெனிஸ் கிரியே உக்ரைன் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ஆண்ட்ரி க்லியூ என்பவரது தீவிர ஆதரவாளராகக் கருதப்படுகிறார்.
இந்த ஆண்ட்ரி க்லியூ உக்ரைனின் முன்னாள் அதிபரும் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றவருமான விக்டர் யானுகோவிச்சின் கூட்டாளியாகக் கருதப்படுகிறது.
உக்ரைன் நாட்டிற்கு எதிரான போரில் வெற்றி பெறும்பட்சத்தில் இந்த விக்டர் யானுகோவிச்சை தான் புதிய அதிபராக நியமிக்க புதின் திட்டமிட்டு வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.