மகளின் காதலை எச்சரித்த தாய்: தாயை சுத்தியலால் தாக்கிய மகள்
பேருவளை, கலவில கந்த பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவர்இ முதியவர் ஒருவருடனான காதல் தொடர்பில் தாய் எச்சரித்ததையடுத்து அவரது தாயின் தலையில் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
சந்தேகநபரான மகளை பேருவளை பொலிசார் கைது செய்து களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.
தனது வீட்டில் அம்மாவிடம் அவ்வப்போது கோபித்துக்கொண்டு தகராறு செய்து வந்தார்
நேற்று மதியம் அம்மாவுடன் நடத்திய உரையாடல் வெகுதூரம் சென்று பின்னர் தாக்குதலாக மாநியுள்ளது.
வீட்டில் இருந்த தனது தாயாரின் தலையில் இரும்புச் சுத்தியினால் தாக்கியதாகவும், பல அடிகளில் காயம் ஏற்பட்டதாகவும் பேருவளை பொலிஸில் தாய் முறைப்பாடு செய்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான தாய் மருத்துவமனையில் இருப்பதாக பொலீசார் தெரிவித்தனர்.
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் தனது தந்தையையும் தாயையும் தாக்கியதாக குறித்தசிறுமி பாடசாலை சீருடையில் இரத்தக்கறை படிந்த நிலையில் பேருவளை பொலிஸில் சரணடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த தாய் பேருவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.