நாளை ஏழரை மணி நேரம் மின்வெட்டு: அமுலாகும் விதம் இதோ!
Prathees
2 years ago
நாளைய தினம் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை (7) திங்கட்கிழமை E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 5 மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், PQRSTUVW ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களுக்கும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலத்துக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.