வருஷத்துக்கு 2 முறைதான் ஷாப்பிங்.. சிக்கனம் கற்றுத்தரும் யூட்யூபர்!

Keerthi
2 years ago
வருஷத்துக்கு 2 முறைதான் ஷாப்பிங்.. சிக்கனம் கற்றுத்தரும் யூட்யூபர்!

கணவன் மனைவி உள்ள குடும்பத்தையோ, ஒரு குழந்தை இரு குழந்தை உள்ள குடும்பத்தையோ வரவு செலவு செய்து ஓட்டுவதே பெரும் காரியமாக இருக்கும் இந்த காலத்தில் ஒரு அம்மா 5 குழந்தைகள் கொண்ட 7 பேர் சேர்ந்த குடும்பத்தை சிக்கனமாக ஓட்டுவதற்கான வழியை குறிப்பிடுகிறார்.

யூட்யூபரும் குடும்பத்தலைவியுமான தபித்தா கெல்லி அவரது யூட்யூப் சேனலில் இதற்கான வழியை குறிப்பிட்டுள்ளார். இவர் அவரது குடும்பம் முழுவதற்கும் ஒரு வருடம் முழுக்க தேவைப்படும் பொருட்களை வருடத்தில் இரண்டே முறை கடைக்கு சென்று வாங்குவாராம். அதிலேயே அந்த வருடம் முழுவதும் ஏழு பேரும் உணவு உண்பதற்கு, வீட்டிற்கு தேவையான பொருட்கள் அடங்கி விடுவதாக கூறுகிறார்.

தபித்தா பேசுகையில், "நாங்கள் 5 குழந்தைகளை உள்ளடக்கிய 7 பேர் கொண்ட பெரிய குடும்பம். நான் சொல்லும் ட்ரிக் எங்கள் குடும்பத்துக்கும் எனக்கும் பொருந்துகிறது. அனைவருக்கும் பொருந்துமா என்று உறுதியாக கூறமுடியாது. நாங்கள் வாங்கும் பொருட்கள் 4 முதல் 6 மாதங்கள் வரை வரவேண்டும் என்பதற்காக நிறைய அளவிலான பொருட்கள் வாங்குகிறோம். என் தரப்பில் இருந்து உணவு திட்டமிடுதல், ஒருங்கினைத்தல் ஆகிய விஷயங்களுக்காக அதிக வேலைகள் செய்யவேண்டி உள்ளது. இதற்கான பர்சேஸை செய்யவே எங்களுக்கு ஒரு நாள் ஆகும். காலை 10 மணிக்கு கடை திறந்ததும் உள்ளே செல்வோம், பிறகு சாயும்காலம் 4 மணியை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் எங்களது பர்சேஸ். கிட்டத்தட்ட இரவானதும் தான் வெளியில் வருவோம். ஒரு முழு நாளை இதற்காக செலவு செய்தாலும் அதனை மிகவும் பயனுள்ளதாகத்தான் நான் பார்க்கிறேன். இதன் மூலம் எங்கள் அனைவருக்கும் எந்த தடையும் இன்றி சில மாதங்கள் உணவு கிடைத்துக்கொண்டே இருக்கிறது. நாங்கள் பெரும்பாலும் ரெஸ்டாரண்ட்டிற்கு செல்வதே இல்லை." என்று கூறுகிறார்.

அவர் பின்னர் அவரது சமையலறையை காண்பிக்கிறார். அது முழுவதும் நிறைந்து உள்ளது. அதில், உணவு பொருட்கள், வீடு சுத்தம் செய்யும் பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் என அனைத்தும் உள்ளது. அதில் 6 பெரிய ஆலிவ் எண்ணெய் பாட்டில்கள் உள்ளன. 10 டஜன் முட்டை, 20 பெட்டி வெண்ணெய், ஒரு வருடத்திற்கு தேவையான அரிசி, 22 பாக்கெட் பாஸ்தா, 95 பாக்கெட் சிப்ஸ் ஆகியவை இருந்தன. இத்தனை பொருட்களை எங்கு சேமித்து வைக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா. அவர்கள் பேஸ்மெண்டில் இதற்கென தனி அறை வைத்துள்ளனர். சில சமயங்களில் அங்கு இடம் பற்றாமல், சமையலறையிலும், வீட்டு ஹாலிலும் வைப்பதாகவும் கூறுகிறார். இருப்பினும் இன்னொரு கேள்வி எழுகிறது அல்லவா… இந்த உணவுப்பொருட்களுள் சில எக்ஸ்பயர் ஆகிவிட்டால் என்ன செய்வது? அதற்க்குத்தான் அத்தனை திட்டமிடல்களும், ஒரு நாள் ஷாப்பிங்கும் என்கிறார் தபித்தா.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!