ஒவ்வொரு இரவிலும் உக்ரைனுக்காக வேண்டிக்கொள்கிறேன்- உலகை உலுக்கும் இத்தாலி சிறுமியின் கடிதம்

Keerthi
2 years ago
ஒவ்வொரு இரவிலும் உக்ரைனுக்காக வேண்டிக்கொள்கிறேன்- உலகை உலுக்கும் இத்தாலி சிறுமியின் கடிதம்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போரால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தாலியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி ஜியோயா மரியா அனுப்பியுள்ள கடிதம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

கடந்த 24-ம் தேதி முதல் உக்ரைன் - ரஷ்யா இடையே ராணுவத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. "சிறப்பு இராணுவ நடவடிக்கைகள்" என்ற போர்வையின் கீழ், உக்ரைன் மீது ரஷ்யா இந்த படையெடுப்பைத் தொடங்கியுள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் உள் கட்டமைப்பு செயலிழந்தபோதிலும், ராணுவ வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தப் போரில் உக்ரைன் நாட்டின் பொதுமக்களும், துப்பாக்கிகளை ஏந்தி ரஷ்யாவிற்கு எதிராக போராடி வருகின்றனர். ரஷ்யாவின் உக்கிரமான தாக்குதலில், உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கெர்சன், கார்கெவ் உள்ளிட்ட நகரங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன.

போருக்குப் பிறகு உக்ரைனை மீண்டும் புதுப்பிக்க உள்ளதாக, அந்நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதியளித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட ரஷ்யாவே, அதற்கான நஷ்ட ஈட்டை திரும்ப கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உக்ரைனுக்கு உணவு, மருந்து, உடைகளை எல்லைப் பகுதிக்குப் பிற நாட்டு மக்கள் தொடர்ந்து அனுப்பி வருகின்றனர். அந்த வகையில் இத்தாலியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி ஜியோயா மரியா, தன்னுடைய சேமிப்பைக் கொண்டு உக்ரைன் சிறுவர்களுக்குப் பரிசுகளை வாங்கியுள்ளார்.

 அத்துடன் மஞ்சள் நிறத் தாளில் நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''உக்ரைன் நண்பர்களுக்கு வணக்கம், என் பெயர் ஜியோயா மரியா. நான் இத்தாலியைச் சேர்ந்தவள். இத்தனை மோசமான போருக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் என் இதயத்துக்கு நெருக்கமானவர்கள். உங்களுக்கு நிறைய பரிசளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் நான் மிகவும் சிறியவள். தொலைவில் இருக்கிறேன். என்னால் முடிந்தது இவ்வளவுதான்.

ஒவ்வொரு இரவிலும் உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன். கடவுளிடம் உங்களுக்காக உதவி கேட்கிறேன்''.

இவ்வாறு ஜியோயா மரியா தெரிவித்துள்ளார். இந்தக் கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!