அமெரிக்கா எத்தகைய தடைகளை விதித்தாலும் நாம் ரஷ்யாவுடன் நிற்க வேண்டும் - ரணில்
அமெரிக்காவும் இங்கிலாந்தும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க விரும்பினால் அது அவர்களின் வேலை. ஆனால் இலங்கை, ரஷ்யாவோ அல்லது பிறரோடு வர்த்தகத்தை நிறுத்தக் கூடாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய சக்தி குறைந்து வருகிறது. ஆசியாவை மீண்டும் உருவாக்க இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் அகில ஆசிய உச்சி மாநாட்டை சீனா கூட்ட வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
அடுத்த பத்து ஆண்டுகளில் ஆசியப் பிராந்தியம் உலகத் தலைவரின் பங்கை ஏற்க முடியும் என முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.
உக்ரேனில் இடம்பெற்றுவரும் மோதல்கள் மற்றும் ஆசியாவில் அதன் தாக்கம் தொடர்பான கலந்துரையாடலின் போதே முன்னாள் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஇ உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதல்கள் மற்றும் ஆசியாவில் அதன் தாக்கம் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிலளித்துள்ளார்.
உலக விதிகளை மேற்கத்திய நாடுகள் மட்டும் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது என்பது ஆசியாவின் கருத்து. அதற்கான சந்தர்ப்பம் ஆசியாவிற்கும் கிடைக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சர்வதேச விவகாரங்கள் பற்றிய அறிவு உள்ளது. அவர் தற்போது ஆசிய-பசிபிக் ஜனநாயகவாதிகள் சங்கத்தின் தலைவராகவும்இ சர்வதேச ஜனநாயகவாதிகள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார். அவர் அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் சர்வதேச ஆய்வு மையத்தின் முன்னாள் பட்டதாரி ஆவார்.