இலங்கையின் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலை இன்று திறப்பு
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலயில் ஏற்றுமதிக்கு பதப்படுத்தும் வலயத்தில் 63 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள உலகின் தலைசிறந்த 20 சீமெந்து தொழிற்சாலைகளில் ஒன்றாக அமையவுள்ள புதிய தொழிற்சாலை இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது இடம்பெறவுள்ளது.
இதன்படி, கைத்தொழில் அமைச்சில் பதிவு செய்யப்பட்ட 06 உள்ளுர் சீமெந்து தொழிற்சாலைகளின் பட்டியலில் சேர்க்கப்படவுள்ள புதிய தொழிற்சாலை இதுவாகும்.
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சீமெந்து தொழிற்சாலைக்கான அடிக்கல் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாட்டப்பட்டது.
புதிய சீமெந்து ஆலையின் மூலம் வருடத்திற்கு 2.4 மில்லியன் மெட்ரிக் டன் சீமெந்து சந்தைக்கு வெளியிட முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தையில் தற்போது நிலவும் சீமெந்து தட்டுப்பாட்டைப் போக்கக்கூடிய வகையில் புதிய சிமென்ட் தொழிற்சாலை அமையும் என கணிக்கப்பட்டுள்ளது.