கோட்டாபயவுக்கு அதிர்ச்சி கொடுத்த 16 எம்பிக்கள்; தென்னிலங்கை அரசியலில் ஏற்படும் திடீர் திருப்பங்கள்
அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட அரசில் அங்கம் வகிக்கும் 10 கட்சிகளின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளனர் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற பேச்சையடுத்து மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிணங்க, அரசின் பங்காளிக் கட்சிகளாகச் செயற்படும் விமல் வீரவன்சவின் கட்சியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், வாசுதேவ நாணயக்காரவின் கட்சியிலிருந்து இரண்டு பேரும், உதய கம்மன்பில, அத்துரலிய ரத்னதேரர், கெவிந்து குமாரதுங்க, ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட 16 பேரே நாடாளுமன்றத்தில் இவ்வாறு சுயாதீனமாகச் செயற்படவுள்ளனர் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை, அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் அவர்கள் தீர்மானித்துள்ளனர். இதன் காரணமாக தென்னிலங்கை அரசையிலளில் பல திருப்பங்கள் ஏற்பட்டஉள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.