உயிரிழந்த ´நெந்துன்கமுவே ராஜா´ யானை ஜனாதிபதியால் தேசிய பொக்கிஷமாக பிரகடனம்
உயிரிழந்த ´நெந்துன்கமுவே ராஜா´ யானை ஜனாதிபதியால் தேசிய பொக்கிஷமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டி எசல பெரஹெராவின் புனித கலசத்தை அதிக முறை சுமந்து சென்ற ´நெந்துன்கமுவே ராஜா´ என அழைக்கப்படும் யானை உயிரிழந்துள்ளது.
இன்று காலை யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழக்கும் போது ´நெந்துன்கமுவே ராஜா´வுக்கு வயது 69 ஆகும்.
இந்நிலையில், யானையை தேசிய பொக்கிஷமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும், யானையின் சடலத்தை எதிர்கால சந்ததியினரின் பார்வைக்காக பாதுகாக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த ´நெந்துன்கமுவே ராஜா´ கடந்த முறையும் எசல பெரஹெராவின் புனித கலசத்தை சுமந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.