12ம் நாள் போர் - உக்ரைனுக்கு ஏவுகணைகளை அனுப்பி வைத்த ஆஸ்திரேலியா

#world_news #Russia #Ukraine
12ம் நாள் போர் - உக்ரைனுக்கு ஏவுகணைகளை அனுப்பி வைத்த ஆஸ்திரேலியா

உக்ரைன் மீது ரஷியா இன்று 12-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. 

இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் ரஷிய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
அதன் பலனாக மனிதாபிமான உதவிகள் வழங்குதல் அடிப்படையிலும் பொதுமக்கள் பத்திரமாக வெளியேறவும் உக்ரைனின் ஒரு சில நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷியா இன்று அறிவித்துள்ளது.

அதேவேளை, ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி வழங்கி வருகின்றன. போரில் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள ஆஸ்திரேலியா அந்நாட்டிற்கு 50 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏவுகணை, வெடிமருந்து உள்ளிட்ட ஆயுதங்களை வழங்க உள்ளதாக  கடந்த வாரம் அறிவித்திருந்தது.    

இந்நிலையில், ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆஸ்திரேலியா தற்போது அதிநவீன ஏவுகணைகளை வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியா அனுப்பிய ஏவுகணைகள் தற்போது உக்ரைன் பாதுகாப்புப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், நமது ஏவுகணைகள் தற்போது உக்ரைனை அடைந்துவிட்டன’ என்றார். மேலும், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு சீனா கண்டனம் தெரிவிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ரஷியாவும், சீனாவும் கூட்டளிகள் எனவும் இவை இரண்டும் சர்வாதிகார வட்டத்தின் பக்கங்கள் என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!