உக்ரைன் மீதான போரை நிறுத்தக்கோரி ரஷ்யாவில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் கைது!

Mayoorikka
2 years ago
உக்ரைன் மீதான போரை நிறுத்தக்கோரி ரஷ்யாவில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் கைது!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தலைநகர் மொஸ்கோ உட்பட ரஷ்யாவின் 56 நகரங்களில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் போராட்டத்தை பொலிஸார் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 4,300 பேரை பொலிஸார் கைது செய்தனர். கொஸ்கோவில் மட்டும் 1,700 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைதான அனைவரும் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் நவால்னியை விடுவிக்கக்கோரி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற பாரிய போராட்டத்தின் பின்னர் ரஷ்யாவில் நடைபெற்ற பெரும் போராட்டமாக இது அமைந்திருந்தது.

இதனிடையே, உக்ரைனின் ஒரு சில நகர்களில் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்ய அரசு இன்று தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், சுமி, மரியபோல் ஆகிய நகரங்களில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான உதவிகள் வழங்குதல் அடிப்படையிலும் பொதுமக்கள் பத்திரமாக வெளியேறவும் இந்த தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இன்று 12-வது நாளாக தொடர்கிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள், தலைநகர் கீய்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!