மருத்துவர்கள் எரிபொருளைத் தமக்கு பெற்று தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
#SriLanka
#Fuel
#doctor
Mugunthan Mugunthan
2 years ago
தமக்கு எரிபொருளை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வழிவகையை ஏற்படுத்தி தருமாறு வைத்தியர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர். எரிபொருளைப் பெறுவதற்கு வைத்தியர்களும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் வைத்தியர் நிஷாந்த சமரவீர தெரிவித்தார்.
வைத்தியர்கள் எதிர்நோக்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண தலையிடுமாறு தமது சங்கம் சுகாதார அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் ருக்ஷான் பெல்லான தெரிவித்தார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.