வரலாறு காணாத உச்சத்தை தொட்ட எண்ணெய்: அதிர்ச்சியில் உலக நாடுகள்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத வகையில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 130 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் 13 வருடங்களில் இவ்வாறு கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நிலவும் போர்ச் சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு நேரடியாகப் பங்களித்துள்ளது. உக்ரைனில் ரஷியா ராணுவ நடவடிக்கையை தொடங்கிய பிறகு உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்திருப்பது இது மூன்றாவது முறையாகும்.
இதனிடையே, ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதியை தடை செய்வது குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது. எதிர்காலத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் விலை மேலும் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.