இன்றைய வேத வசனம் 08.03.2022: அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்
Prathees
2 years ago
அன்னைத் தெரசா வசதியான குடும்பத்தில் மாசிடோனியா தேசத்தில் பிறந்தவர்.
தன் தேசம் வசதியான வாழ்க்கை எல்லாவற்றையும் துறந்து கல்க்கத்தாவில் சுகாதாரக் குறைவான பகுதியில் எந்த சுயநலமும் எதிர்ப்பார்பும் இன்றி கைவிடப்பட்டவர்களின் நலனுக்காகப் பாடுப்பட்டார்.
சமாதானத்திற்க்கான நோபல் பரிசு அவருக்கு கொடுக்கப்பட்டது.
நாமும் பிரதிபலன் நாடாமல் பாராட்டுகளை எதிர்பாராமல் தேவ ஊழியம் செய்ய ஆயத்தமாயிருக்கிறோமா?
மற்றவர்களின் நல்வாழ்வைக் குறித்த பாரம் நமக்கு இருந்தால் மட்டுமே தேவன் பயன்ப்படுத்தும் சிறந்த பாத்திரமாக நம்மை மாற்ற முடியும்.
கலாத்தியர் 5:13
சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.