வெளிநாட்டிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வருபவர்களுக்கான அவசியமான மருத்துவக் காப்புறுதி.
இலங்கையிலிருந்து அல்லது பிற நாடுகளிலிருந்து சுவிசிற்கு வருபவர்கள், கட்டாயம் செங்கன் விசா பெறவேண்டும்.
அவ்விசாவை பெறுவதானால், அதற்கான பல ஆவணங்களை தூதுவர் ஆலையத்தில் சமர்ப்பிக்கவேண்டும். அந்த ஆவணங்களில் விருந்தாளிக்கு மருத்துவக் காப்புறுதி செய்யப்பட்ட அத்தாட்சி சான்றிதழும் சமர்ப்பிக்கப்படவேண்டும். அச்சான்றிதழின் கால அளவைப் பொறுத்தே விசா வழங்கப்படும்.
எனவே வெளிநாட்டிலிருந்து சுவிஸ் வருபவர்களுக்கான மருத்துவக் காப்புறுதியை எம்மூடாக செய்துகொள்ளலாம்.
இதை எவ்வாறு செய்துகொள்ளலாம்...?
- இக்காப்புறுதியை 15 நாட்களிலிருந்து 182 நாட்கள் வரை செய்துகொள்ளலாம்.
- இக்காப்புறுதிக்குள் 50,000.- பிராங்குகள் பெறுமதியான காப்பீட்டுத் தொகை அடங்குகிறது.
- அத்தோடு விமான உதவி, உலங்குவானூர்தி உதவி, அவசர மருத்துவ வாகன உதவி என்பனவற்றை செய்துகொள்ள பிரத்தியேகமாக கட்டணம் செலுத்தவேண்டும்.
- 1வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டோர் தற்பொறுப்புக் கட்டணமாக 200.- மற்றும் 60 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்டோருக்கு 500.- விருந்தாளியின் பக்கத்தாரே கட்டவேண்டும்.
- SOS SCHUTZ உதவிக்காக 62 நாட்களுக்கு CHF 35.- மற்றும் 6 மாதங்களுக்கு CHF 70.- கட்டணம் அறவிடப்படும்.
- விசா மறுக்கப்படும் பட்சத்தில் 50.- வேலைக்கட்டணமாக கழித்து மிகுதிக்கட்டணம் 3 தொடக்கம் 4 வாரத்தினுள் திருப்பி உங்கள் வங்கிக் கணக்குக்கு அனுப்பபடும்.
விசா மறுக்கப்பட்டவர்கள் மீளக்கட்டணத்தை பெற எமக்கு அனுப்பவேண்டிய ஆவணங்கள். பின்வருமாறு:
- தூதுவர் ஆலயத்தால் விசா மறுக்கப்பட்டால், அதை உத்தரவாதப்படுத்திய கடிதம்.
- அல்லது மீள விசாவிற்கு மீள் விண்ணப்பம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டால் அக்கடிதமும் விண்ணப்பதாரியின் கடவுச்சீட்டின் அனைத்துப் பக்கங்களினதும், பிரதிகள்.
- விசா பெற ஏதாவது காரணமாக தூதுவர் ஆலயத்துக்கு செல்லாதவர்கள் கடவுச்சீட்டின் அனைத்துப் பிரதிகளையும். அனுப்பலாம்.
- அத்தோடு காப்புறுதிக்கட்டணம் செலுத்திய இரசீதின் அசலையும், அதற்காக கொடுக்கப்பட்ட அச்சிறிய புத்தகத்தையும், விருந்தாளிக்காக கட்டணம் கட்டியவரின் வங்கி அட்டைப் பிரதியையும், பதிவு தபால் ஊடாக கீழ் காணும் விலாசத்துக்கு அனுப்பவும்.
EUROPÄSCHEREISEVERSICHERUNGS AG (ERV)
St. Alban-Anlage 56
4002 Basel
சுவிசிலிருந்து விசா பெற தூதுவராலையத்துக்கு விருந்தாளிகளை அழைப்பவர் அனுப்பவேண்டிய ஆவணங்கள்:
- கடவுச்சீட்டுப் பிரதிகள் கணவன் மற்றும் மனைவி
- கணவன் மற்றும் மனைவியினதும் அடையாள அட்டைப்பிரதிகள்.
- கடைசி 3 மாத சம்பளப் பற்றுசீட்டுக்கள்.
- சம்பளம் வங்கிக்கு வந்ததற்கான வங்கியின் சான்றிதழ்.
- சொந்த தொழில் புரிபவராக இருந்தால், அவரது நிறுவனச் சான்றிதழ்.
- சுவிசில் விருந்தாளி தங்கும் இடத்தின் ஒப்பந்தம்.
- வருபவர் எதற்காக வருகிறார் என்பதற்கான காரணத்துடனான கடிதம்.
- விருந்தாளி ஏதாவது கொண்டாட்டங்களுக்காக இருந்தால், அதன் அழைப்பிதழ்.
- விருந்தாளியை அழைப்பவர் சுவிஸ் பிரஜையாகவிருந்தால், பிரத்தியேகமாக FAMILIENBESTÄTIGUNG இணக்கவேண்டும்.
- சுவிசில் திருமணமானவராயின், FAMILIENBUCH இணைக்கவேண்டும்.
- சுவிசை விட்டு வெளியே திருமணமானவராயின் திருமணப்பதிவு சான்றிதழ் அனுப்பவேண்டும்.
சுவிசுக்கு வருபவர் தூதுவராலையத்துக்கு கொடுக்கப்படவேண்டிய ஆவணங்கள்:
- வருபவரின் கடவுச்சீட்டு.
- வருபவரின் அடையாள அட்டை.
- வருபவரின் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம்.
- வருபவருக்கு வங்கியில் சேமிப்பு இருந்தால் அதன் அத்தாட்ச்சி பத்திரம்.
- இலங்கையில் வருபவரின் பெயரில் சொத்துக்கள் இருந்தால் அதன் அத்தாட்ச்சிப் பத்திரம்.
- வர இருக்கும் நாளில் விமான பயணசீட்டு முன்பதிவு சாண்றிதழ். பயணச்சீட்டை எம்மிடமும் பெறலாம்.
- மற்றும் சுவிசிலிருந்து விருந்தாளியால் அனுப்பப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சேர்த்து கொன்டு செல்லல் அவசியம்.
- மருத்துவக்காப்புறுதி பெற எமக்கு அனுப்பவேண்டிய ஆவணங்கள்:
- விருந்தாளியின் கடவுச்சீட்டு பிரதி.
- விருந்தாளியை சுவிசுக்குள் அழைப்பவரின் அடையாள அட்டை பிரதி.
- மருத்துவக்காப்புறுதிக்கான கட்டணம் கட்டிய இரசீது.
இல் நேரடியாக காப்புறுதி சான்றிதழை பெற விரும்புவோர் கீழே உள்ள லிங்கை அழுத்தி முயற்ச்சிக்கலாம்.
Reiseversicherung - Selva Group (shelvagroup.com)