இன்றைய வேத வசனம் 09.03.2022: கர்த்தாவே, மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 09.03.2022: கர்த்தாவே, மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.

மிச்சல் கிராண்ட், டிம்பர் என்று பெயரிட்டு ஒரு நீர்நாய்க்கு பயிற்சியளித்து, அதை காட்டில் கொண்டுபோய் விட தீர்மானித்தார். அதற்கு நீச்சல் பழக்குவதற்கு அதை குளத்தில் கொண்டுபோய் விட்டபோது, சிறிய படகில் பயணித்த மிச்சலிடத்தில் அது திரும்பவந்து தன் மூக்கால் படகை வருடியது.

ஒரு நாள் காலையில் டிம்பர் படகின் அருகே வரவேயில்லை. குளத்தில் ஆறு மணி நேரம் தேடியும் டிம்பரைக் காணவில்லை. சில வாரங்கள் கழித்து அந்த குளத்தின் அருகே ஒரு நீர்நாயின் எலும்புக்கூட்டை மிச்சல் கண்டெடுத்தாள். அது டிம்பருடைய எலும்புக் கூடுதான் என்று எண்ணிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

மிச்சலுக்காகவும் டிம்பருக்காகவும் என் மனது வலித்தது. “அது ஒரு நீர் வாழ் ஜந்து தானே” என்று எனக்குள் ஆறுதல் படுத்திக்கொண்டேன். ஆனால் நான் அதை நேசிப்பதுபோல், தேவனும் அதை நேசித்து பராமரிக்கிறார் என்பதே உண்மை.

வானளாவும் அவருடைய அன்பு, தாழ பூமியிலுள்ள சிறிய உரியினங்களையும் எட்டுகிறது. அவருடைய சிருஷ்டிப்பின் பகுதியில், நம்மை நல்ல பராமரிப்பாளர்களாக அழைக்கிறார் (ஆதியாகமம் 1:28). அவர் “மனுஷரையும் மிருகங்களையும்” காப்பாற்றுகிறார் (சங்கீதம் 36:5-6). “அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்” (147:9).

ஒரு நாள் மிச்சல் அந்த குளத்தில் படகின் மூலம் பயணித்தபோது, அங்கே டிம்பர் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அங்கே டிம்பர் தன் குடும்பத்தை தேடிக்கொண்டது. அதின் குடும்பத்தின் வேறு இரண்டு குட்டிகளை வளர்க்கவும் மிச்சல் உதவிசெய்தார்.

டிம்பர் மிச்சலின் படகின் அருகே வந்து, அதை தன் நுனி மூக்கால் செல்லமாய் வருடியது. “நீ நன்றாய் வாழ்கிறாய், உனக்கு அழகான ஒரு குடும்பம் இருக்கிறது” என்று மிச்சல் புன்னகையோடு கூறினாள். டிம்பர், சத்தம் எழுப்பிக்கொண்டு தன் வாலால் தண்ணீரை பீய்ச்சியடித்து, தன் புதிய அம்மாவை தேடிப் புறப்பட்டது.

எனக்கு மகிழ்ச்சியான முடிவு பிடிக்கும். பிதா, ஆகாயத்துப் பறவைகளை போஷிக்கிறவராதலால் அவர் நம்மையும் போஷிக்க போதுமானவர் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 6:25-26). “உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் (அடைக்கலான் குருவிகள்) ஒன்றாகிலும் தரையிலே விழாது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” (10:29-31).

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!