ஐ.நாவின் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்: ரணில் விக்கிரமசிங்க

Mayoorikka
2 years ago
ஐ.நாவின் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்: ரணில் விக்கிரமசிங்க

உபாலி அபேரத்ன தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டே அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எம்.பிக்கள் விசாரணைக்காக அழைக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கும்   ரணில் விக்கிரமசிங்க இந்த ஆணைக்குழுவின் சட்டத்தன்மை குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (08) அமர்வில் கலந்துகொண்டு சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நான் உள்ளிட்டப் பல எம்.பிகள் இவ்வாரம் அழைக்கப்பட்டுள்ளோம். பாராளுமன்ற அமர்வுகளுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டியுள்ளதால், இவ்வாரம் அந்த ஆணைக்குழுவுக்கு முன் ஆஜராவதில் சிரமம் என நான் எனது சட்டத்தரணி ஊடாக அறிவித்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரே தடவையில் அனைவரையும் அழைக்காது அவர்களுக்கான நேரத்தை ஆணைக்குழு வழங்க வேண்டும். பாராளுமன்ற கூடும் நாட்கள் தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

உபாலி அபேரத்ன தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டே அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எம்.பிக்கள் விசாரணைக்காக அழைக்கப்படுகிறார்கள். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்த ஆணைக்குழுவின் சட்டத்தன்மை தொடர்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.

எனவே இதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். அதுவரையில் விசாரணைக்கு அழைப்பதில் எவ்விதப் பயனும் இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் சர்வதேசப் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்படும். உபாலி அபேரத்னவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கடந்த மாத அறிக்கையிலும் இதற்கு முன்னரான அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே வெளிவிவகார அமைச்சரும், நீதி அமைச்சரும் இது தொடர்பில் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!