இலங்கை மின்சார சபை பொதுமக்களுக்கு விடுத்த அவசர வேண்டுகோள்!
Mayoorikka
2 years ago
பல அனல் மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருளின் கையிருப்பு குறைந்தளவே காணப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ட்ரூ நவமனி, மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திலும் டீசலின் கையிருப்பு குறைவடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மின் உற்பத்தி நிலையத்தினூடாக 149 மெகாவாட் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் இணைத்துக் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.