இலங்கைக்கு 600 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதிக்கு புதிய நிபந்தனைகள்!

#Basil Rajapaksa #SriLanka
Nila
2 years ago
இலங்கைக்கு 600 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதிக்கு புதிய நிபந்தனைகள்!

இலங்கைக்கு 600 அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் அடங்கிய அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அந்நிய செலாவணி வெளியேறுவதை தவிர்த்து இறக்குமதியை கட்டுப்படுத்த நிதி அமைச்சகமும் இலங்கை மத்திய வங்கியும் இணைந்து அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலை தயாரித்துள்ளது.

இவற்றை தடை செய்வதற்கு பதிலாக மூன்று நிபந்தனைகளின் கீழ் இறக்குமதி செய்ய அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குறிப்பிட்ட சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விசேட உரிமம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் மேலும் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் அதிகரிக்கப்படும்.

மேலும், நாட்டிற்கு இறக்குமதி செய்ய மீதமுள்ள பொருட்களை கட்டுப்படுத்த மற்ற மாற்று வழிகள் பின்பற்றப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பை நிதி அமைச்சகம் விரைவில் வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.