எரிபொருள், எரிவாயு நெருக்கடி காரணமாக மரக்கறி வியாபாரத்திலும் சிக்கல் !
Prabha Praneetha
2 years ago
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக மரக்கறி வர்த்தகம் 40 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகன சாரதிகள் தோட்டங்களுக்கு சென்று காய்கறிகளை கொள்வனவு செய்யவோ அல்லது சந்தைக்கு கொண்டு வரவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்க தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், சந்தைக்கு காய்கறிகள் வாங்க வரும் தொழில் முனைவோர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.