இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 09-03-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 09-03-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-கவலை

இல்லாதவனுக்கு
இருக்கிறவனைப் பார்த்துக்
கவலை - பணம்.
இருக்கிறவனுக்கு
இல்லாதவனைப்பார்த்துக்
கவலை - நோய்

பொன்மொழி - 02 -

தலைப்பு:-தப்பு

நம்மை தப்பாக
புரிந்து
கொண்டவர்களுக்கு...
நாம் செய்யும்
அனைத்தும்
தப்பாகவே தெரியும்.

பொன்மொழி - 03 -

தலைப்பு:-கோபம்

அடிக்கடி கோபப்பட்டால்
கோபத்திற்கு மரியாதை
இல்லை!
கோபமே படாவிட்டால்
நமக்கே மரியாதை இல்லை.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-கையில்

எதுவும்
கையில் கிடைப்பதற்கு
முன்பே, கனவுகளை
வளர்த்துக் கொள்ளாதே.
கையில் கிடைத்தவையே
இந்த உலகில்
நிரந்தரம் இல்லை!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-பாதை

கடந்து வந்த பின்தான் புரிகிறது
இன்னும் அழகாய் வந்த பாதையை
கடந்திருக்கலாமோ என்று...
மீண்டும் நடக்க நினைக்கையில்
பயணம் முடிவடைந்து விடுகிறது....
நடக்கும் போதே அழகாய்
கடந்திடுவோம் நமக்கான
பாதைகளில்....