13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ள முக்கிய 7 நிறுவனங்கள்!

Prabha Praneetha
2 years ago
13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ள முக்கிய 7 நிறுவனங்கள்!

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் எரிபொருளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ளன.

நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (கோப்) அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத திணைக்களம், இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸ் ஆகியனவும் பணம் செலுத்த தவறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறிப்பாக மின்சார சபை 73 பில்லியன் ரூபாயினையும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 56 பில்லியன் ரூபாவையினையும் செலுத்த தவறியுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!