உக்ரேனிலுள்ள 27 இலங்கையர்கள் வெளியேற விரும்பவில்லை - வெளிவிவகார அமைச்சர்

#SriLanka #Ukraine #G. L. Peiris
உக்ரேனிலுள்ள 27 இலங்கையர்கள் வெளியேற விரும்பவில்லை - வெளிவிவகார அமைச்சர்

உக்ரேனில் வசிக்கும் 27 இலங்கையர்கள், வெளியேறாமல் தொடர்ந்தும் உக்ரேனில் தங்கியிருப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

உக்ரேனுடன் அங்கீகாரம் பெற்ற துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் இலங்கையர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.

1,561 இலங்கையர்கள், முக்கியமாக பல்கலைக்கழக மாணவர்கள் பெலருஸில் வசித்து வருவதாகவும், அவர்கள் ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகத்தால் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையில் தற்போது நிலவும் மோதல் நிலையை கருத்தில் கொண்டு இலங்கை மாணவர்களுக்கு ஒரு மாத விடுமுறையை பிரகடனப்படுத்த பெலருசிய பல்கலைக்கழகங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.