அத்தியாவசிய இடங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம்?.. ஏனைய இடங்களில் மின்சாரம் துண்டிப்பு
அத்தியாவசியப் பகுதிகளுக்கு தடையின்றி மின்சார விநியோகத்தை வழங்குமாறும், இதற்காக தொடர்ச்சியான செயற்பாட்டு அறையை அமைக்குமாறும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, இலங்கை மின்சார சபை, நிலையான எரிசக்தி ஆணையம், நீர்ப்பாசன அமைச்சு, தொழில் அமைச்சு, முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம், சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு போன்ற பல நிறுவனங்களின் பங்கேற்புடன் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உரிய திணைக்களங்களுக்கு இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தடையில்லா மின்சாரம் வழங்குவது கடினமாக இருந்தாலும், மருத்துவமனைகள், பாதுகாப்பு மையங்கள்இ முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களுக்கு தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.