எதற்காக முஸ்லீம் பகுதிக்குள் நுழைந்தார் தேரர்? முறியடிக்கப்பட்ட ரகசியத் திட்டம். பின்னணி என்ன? யார்?

Reha
2 years ago
எதற்காக முஸ்லீம் பகுதிக்குள் நுழைந்தார் தேரர்? முறியடிக்கப்பட்ட ரகசியத் திட்டம். பின்னணி என்ன? யார்?

அம்பாறை - பாலமுனையின் முள்ளிமலையில் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்கும் நடவடிக்கை இடம்பெற்ற போது பிரதேச அரசியல்வாதிகள், பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வருகைதந்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அம்பாறை - அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலை பிரதேசத்தில் உள்ள தனியார் காணியில் புராதன சின்னங்கள் உள்ள காணியென பொய்யான பரப்புரையை முன்வைத்து புத்தர் சிலையொன்றை நிறுவ பௌத்த பிக்குகளும், சிங்கள இளைஞர்கள் சிலரும் முயற்சித்துள்ளனர்.

இதனால் குறித்த பிரதேசத்தில் சிறிய பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுள்ளாஹ் உட்பட முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் உட்பட பிரதேச அர சியல்வாதிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இது குறித்து அட்டாளைச்சேனை பிரதேச செயலாலருடன் தொடர்பு கொண்டு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு விடயம் கொண்டு வரப்பட்டதுடன் இம்முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த அத்துமீறல் நடவடிக்கை மேற்கொண்ட தரப்பினருடன் கிழக்குமாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை சுமூகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன், சம்பவ இடத்திற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை வரவழைத்து நிலமையை விளங்கப்படுத்தியிருந்தார்.

விடயங்களை மிக அவதானத்துடன் கேட்டறிந்துகொண்ட அரசாங்க அதிபர் உடனடியாக தீர்வினை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.