விற்றமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மிக்க கீரை பிரியாணி சமைத்துப்பாருங்கள்.

#Cooking #Vegetable #Biryani
விற்றமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மிக்க கீரை பிரியாணி சமைத்துப்பாருங்கள்.

தேவையானவை:

  • பச்சரிசி - 2 கப்,
  • ஆய்ந்து, சுத்தம் செய்து, நறுக்கிய முளைக்கீரை - 2 கப்,
  • துருவிய தேங்காய், கொத்த மல்லித் தழை - தலா கால் கப்,
  • எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
  • உப்பு - தேவைக்கேற்ப. 

தாளிக்க:

  • கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
  • உடைத்த முந்திரிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்,
  • கடைகளில் கிடைக்கும் மசாலா
  • வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்,
  • தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

செய்முறை:

  1. பச்சரியை வெறும் வாணலியில் வறுத்து, சிறிதளவு உப்பு சேர்த்து, மூன்றரை கப் நீர் விட்டு உதிர் உதிராக வேக விடவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு முளைக்கீரை, கொத்த மல்லித் தழையை வதக்கி, தேங்காய்த் துருவலை சேர்த்து வதக்கவும்.
  3. இதை நீர் விடாமல் மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பை வறுத்து...
  4. முந்திரிப் பருப்பு, மசாலா வேர்க் கடலை சேர்த்துக் கிளறி... அரைத்த கீரை, உப்பு சேர்த்து இரண்டு முறை புரட்டி அடுப்பை அணைத்து விடவும்.
  5. உதிர் உதிராக வடித்த சாதத்தை இதனுடன் சேர்த்துக் கிளறி விடவும். குறிப்பு: முளைக்கீரைக்குப் பதில் அரைக்கீரை, சிறுகீரை சேர்க்கலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!