மீண்டும் செஷல்ஸ் கடற்படையினர் சிறைபிடிப்பில் இந்திய மீனவர்கள்; தொடரும் எல்லை பிரச்னை

#India #Fisherman #Fish
மீண்டும் செஷல்ஸ் கடற்படையினர் சிறைபிடிப்பில் இந்திய மீனவர்கள்; தொடரும் எல்லை பிரச்னை

குமரி மாவட்டம் தூத்தூர் மற்றும் பூத்துறை பகுதியை சேர்ந்த சூசை நாயகம், அந்தோணி என்பவர்களது படகுகளையும் அதில் இருந்த 25 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நேற்று செஷல்ஸ் நாட்டு கடற்படையினர் சிறைபிடித்து உள்ளனர். இதோடு சேர்த்து 5 படகுகளை சீஷெல்ஸ் நாட்டு கடற்படையினர் கைது செய்து 58 மீனவர்களை சிறைபிடித்து வைத்துள்ளனர்.

ஏற்கெனவே கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து கடந்த 22 ம் தேதி ஆள்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற சின்னத்துறை பூத்துறை தூத்தூர் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த குக்ளின், சுனில், ஜெனீஷ் உள்ளிட்டோரின் மூன்று படகுகள் மற்றும் அதில் இருந்த 33 மீனவர்களையும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 7 ம் தேதி முதல் சீஷெல்ஸ் நாட்டு கடற்படையினர் சிறைப்பிடித்து வைத்திருக்கும் நிலையில், நேற்று காலை தூத்தூர் மற்றும் பூத்துறை பகுதியை சேர்ந்த மீனவர்களான சூசைநாயகம் மற்றும் அந்தோணி என்பவர்களது இரண்டு படகுகளையும் அந்நாட்டு படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். 

அந்த இரண்டு படகுகளிலும் குமரி மாவட்டம் மற்றும் கேரள வடமாநிலங்களை சேர்ந்த 25 மீனவர்கள் இருந்துள்ளனர். இவர்களையும் கைது செய்து படகு கேப்டன்களை மட்டும் சிறையில் அடைத்தும் மீதமுள்ள மீனவர்களை தங்களது படகுகளிலேயே தங்க வைத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!