இன்றைய வேத வசனம் 12.0.2022: உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 12.0.2022: உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்


உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.  நீதிமொழிகள் 3:6

காகிதத் துண்டுகள் முதல் ஆயுள்காப்பீட்டு திட்டங்கள் வரை பல்வேறு வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கும் உலகத்தில் நாம் வாழுகிறோம். 2004ஆம் ஆண்டு “தேர்ந்தெடுப்பில் முரண்பாடு” (The Paradox of Choice) என்ற புத்தகத்தை ஓர் உளவியலாளர் எழுதியிருக்கிறார்.

அதில்அவர், தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொருவரின் நல்வாழ்வுக்கும் முக்கியம் என்றாலும் அதிக தேர்வுகள் நம்மை சோர்வுக்கும், உறுதியற்ற தன்மைக்கும் வழிநடத்தும் என்கிறார். தேர்வுகள் குறைவாயிருக்கும் போது, காகித துண்டுகளை தேர்வு செய்வதில் சிரமமில்லாத போதிலும், வாழ்வின் முக்கியமான முடிவுகளை எடுக்கையில் உறுதியற்ற நிலை பெரும் பங்கு வகித்து பாதிப்புக்குள்ளாக்கும். இந்த தீர்மான தடுமாற்றத்தை மேற்கொண்டு எவ்வாறு உறுதியுடன் முன்னேறி இயேசுவுக்காய் வாழ முடியும்? 

கிறிஸ்துவின் விசுவாசிகளாய் தெய்வீக ஞானத்தை நாம் தேடுவது, கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள உதவும். நாம்வாழ்க்கையில் சிறியதோ அல்லது பெரியதோ, எந்த தீர்மானங்களை எடுத்தாலும், “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு” (நீதிமொழிகள் 3:5) என்று வேதம் நமக்கு ஆலோசனைக் கொடுக்கிறது.

நம்முடைய சுயதீர்மானங்களை சார்ந்துகொள்ளும்போது, நாம் குழப்பத்திற்குள்ளாகவும், கவலைக்குள்ளாகவும் கடந்து போய் முக்கியமானதை தவறவிட்டு விடுகிறோம். அல்லது, தவறான தேர்வுகளை தேர்ந்தெடுக்கிறோம். எனினும் நாம் பதிலுக்காய் தேவனை சார்ந்துகொள்ளும்போது, அவர் “(நம்) பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (வச.6). நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் எடுக்கும் தீர்மானங்களில் சமாதானத்தையும், தெளிவையும் உண்டுபண்ணுவார். 

நம்முடைய சுயதீர்மானங்களின் சுமையினால் நாம் முடக்கப்படுவதையும், மேற்கொள்ளப்படுவதையும் தேவன் விரும்பவில்லை. நம்முடைய தேவைகளை விண்ணப்பங்களாய் அவருடைய சமுகத்திற்கு கொண்டு வரும்போது, அவர் கொடுக்கும் வழிநடத்துதலிலும், ஞானத்திலும் இளைப்பாறுதலை நாம் பெறுகிறோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!