ஆட்டிறைச்சி சொதி அல்லது ஆட்டிறைச்சி வெள்ளைக் குழம்பு வைக்கும் முறை.
#Cooking
#Mutton
#curry
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருட்கள் :
- மட்டன் - 300 கிராம்
- இஞ்சி விழுது - 30 கிராம்
- பூண்டு விழுது - 30 கிராம்
- பச்சை மிளகாய் - 6
- தேங்காய்ப்பால் (இரண்டாம் முறை எடுத்தது) - 200 மில்லி
- தேங்காய்ப்பால் (முதல் முறை எடுத்தது) - 100 மில்லி
- மஞ்சள்தூள் - 5 கிராம்
- எலுமிச்சைப்பழம் - 1
- கறிவேப்பிலை - தேவையான அளவு
- தேங்காய் எண்ணெய் - தேவைக்கு
- பட்டை - 10 கிராம்
- ஏலக்காய் - 3
- கிராம்பு - 3
- உப்பு - தேவையான அளவு
செய்முறை :
- ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும் எலுமிச்சை பழத்திலிருந்து சாறு பிழிந்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மட்டன், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், எலுமிச்சைச்சாறு, உப்பு, இரண்டாம் தேங்காய்ப்பால் சேர்த்து 2 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும். பிறகு வெளியில் எடுக்கவும்.
- ஆட்டுக்கறி சமநிலைக்கு வந்ததும், குக்கரில் போட்டு 6 விசில் போட்டு இறக்கி ஆற விடவும். கடாயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி,
- இதில் கறிவேப்பிலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு பச்சை மணம் போகும் வரை வதக்கவும். பின்னர் குக்கரில் வேக வைத்த மட்டனை இதில் சேர்க்கவும்.
- இப்பொழுது முதல்முறை எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றி, உப்பை சரி செய்யவும். லேசாகக் கொதி வந்தவுடன் இறக்கி சூடாகப் பரிமாறவும். (அதிக நேரம் கொதிக்க வைத்தால், திரிந்து விடும்).
- சுவையான மட்டன் சொதி ரெடி. அதை இடியாப்பம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.