INDvsSL - இலங்கை அணிக்கு 447 ஓட்ட வெற்றி இலக்கு!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 447 என்ற வெற்றி இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட அணித்தலைவர் ரோஹித் சர்மா தீர்மானித்தார்.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இந்திய அணி சார்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 92 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் எம்புல்தெனிய மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 109 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்ப்பில் எஞ்சலோ மெத்தியூஸ் அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் ஜெஸ்பிரிட் பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
இதற்கமைய, தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி போட்டியின் இரண்டாவது நாளான இன்று 9 விக்கெட் இழப்பிற்கு 303 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.
அதன்படி, இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 447 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி சார்பில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 67 ஓட்டங்களையும், ரிசப் பன்ட் 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் பிரவின் ஜயவிக்கிரம 4 விக்கெட்டுக்களையும், லசித் எம்புல்தெனிய 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.