சிக்கனமான ஆரோக்கிய சாப்பாடு முட்டை பாண் பிரியாணி செய்வது எப்படி?
#Cooking
#Egg
#meal
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருட்கள்
- பாண் -1 இறாத்தல்
- முட்டை- 5
- இறால் - 100 கிராம்
- உருளைக்கிழங்கு - 1/4 கிலோ கிராம்
- கறிமிளகாய் - 50 கிராம்
- வெங்காயம் - 100 கிராம்
- பச்சை மிளகாய் - 4
- தக்காளிப் பழம் - 2
- இஞ்சி, பூண்டு விழுது- 1 மேசைக்கரண்டி
- தக்காளிச் சோஸ் - 3 மேசைக்கரண்டி
- சோயா சோஸ் - 2 மேசைக்கரண்டி
- மாஜரின் - 50 கிராம்
- எண்ணெய் - 500 மில்லி லீற்றர்
- மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - 1 நெட்டு
- கடுகு - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை :
- முதலில் உருளைக் கிழங்கு, கறிமிளகாய், வெங்காயம் என்பவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
- பின் பச்சை மிளகாயை சிறிதாக கீறவும். தாச்சியில் எண்ணெய் ஊற்றி சிறு சிறு துண்டுகளாக வெட்டிய உருளைக் கிழங்கினை நன்றாக வேகும் வரை பொரித்தெடுக்க வேண்டும்.
- பின் பாணை சிறு சிறு துண்டுகளாக்கி வைக்கவும். இறாலை சுத்தம் செய்து அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பொரித்து வைக்கவும்.
- தக்களிப் பழத்தை மிக்ஸியில் இட்டு கூழாக அரைக்க வேண்டும். பின் முட்டையில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் ஒரு தாச்சியில் மாஜரீனை இட்டு மாஜரீன் நன்கு சூடாகியதும் அதில் முதலில் கடுகை இட்டு அது வெடித்தவுடன் இஞ்சிப்பூண்டு விழுதினைச் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
- பின் அதனுடன் வெங்காயம், கறிமிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை என்பவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- நன்றாக வதங்கிய வுடன் அதனுடன் அடித்து வைத்துள்ள முட்டையினை சிறிது சிறிதாக இட்டு வறை போல நன்றாகக் கலக்கவும். பின் தக்களிக் கூழினை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- அதன் பின் உருளைக் கிழங்கை, இறால், உப்பு, தக்காளிச் சோஸ், சோயாச் சோஸ் என்பவற்றைச் சேர்த்து நன்றாக கிளறவும்.
- நன்றாக கலவை திரண்டு வந்ததும் அதனுடன் சிறு சிறு துண்டுகளாக்கி வைத்துள்ள பாணை இட்டு நன்றாக பிரட்ட வேண்டும்.
- சுவையானதும் ஆரோக்கி யமானதுமான முட்டை பாண் பிரியாணி ரெடி! சூடுடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.